தொகுதிகளுக்காக கெஞ்சுவதை விட தனித்துப் போட்டியிடுவது மேல் - மாயாவதி

  பாரதி கவி   | Last Modified : 09 Oct, 2018 07:04 pm

fighting-polls-alone-will-be-better-choice-mayawati

கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டுக்காக கெஞ்சுவதைவிட தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதே மேல் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். அவரது கருத்து காங்கிரசுக்கு எதிரானது எனக் கருதப்படுகிறது.

 ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில், மாயாவதி - காங்கிரஸ் இடையே கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனித்துப் போட்டி என  அவர் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இந்நிலையில், தொகுதிப் பங்கீடுக்காக கெஞ்ச முடியாது என காங்கிரசை மறைமுகமாகக் குற்றம்சாட்டியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராமின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அதுகுறித்த நிகழ்ச்சியில் மாயாவதி பேசியதாவது:

பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே உயர் ஜாதி ஏழைகளின் நலனுக்காகத்தான் பாடுபடுகின்றன. தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்கள், முஸ்லிம்கள், இதர சிறுபான்மையினர், உயர் ஜாதி ஏழைகள் உள்ளிட்டோரின் சுயமரியாதையில் பகுஜன் சமாஜ் கட்சி சமரசம் செய்து கொள்ளாது.

தேர்தல் கூட்டணி அமைய வேண்டுமென்றால் கண்ணியமான எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நிபந்தனை வைத்தோம். தொகுதிகளுக்காக பகுஜன் சமாஜ் கட்சி கெஞ்சாது. கண்ணியமான எண்ணிக்கை வழங்கப்படாததால், தனித்துப் போட்டி என்ற முடிவு எடுக்கப்பட்டது என்றார் அவர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close