ஊடுருவல்காரர்களால் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழந்தனர் - அமித் ஷா

  பாரதி கவி   | Last Modified : 10 Oct, 2018 10:14 am

youths-loosed-jobs-because-of-infiltrators-amit-shah

நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோனதாக பா.ஜ.க தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டினார். மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சிவபுரியில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது அவர் இவ்வாறு பேசினார்.

அவர் மேலும் பேசியதாவது: இந்திய குடிமக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை பா.ஜ.க அரசு வெளியேற்றும். அஸ்ஸாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு (என்.ஆர்.சி.) நடத்தியபோது, வெளிநாட்டு ஊடுருவல்காரர்கள் 40 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டனர். ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் அத்திட்டத்தை எதிர்க்கின்றன.

சட்டவிரோதமாக ஊடுருவியவர்களால்தான் நாட்டில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பறிபோனது. நம் நாட்டு இளைஞர்களின் நலன்களையும், பசியையும் பிற கட்சிகள் கவனிக்கத் தவறிவிட்டன. தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், அடுத்த ஆண்டில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நாங்கள் வெற்றி பெற்ற பிறகு, நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய ஒவ்வொரு நபரையும் பா.ஜ.க அரசுகள் வெளியேற்றும் என்றார்.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close