காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல்: ஜம்முவில் உற்சாக வாக்குப்பதிவு; காஷ்மீரில் மந்தம்!

  Newstm Desk   | Last Modified : 10 Oct, 2018 04:17 pm

kashmir-civic-polls-jammu-sees-higher-turnout-kashmir-valley-underwhelming

ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், மதியம் வரை 57% மக்கள் வாக்களித்துள்ளனர். ஜம்முவில் மக்கள் உற்சாகமாக வாக்களித்த நிலையில், காஷ்மீரில் மந்தமான வாக்குப்பதிவு காணப்படுகிறது.

4 கட்டங்களாக ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. தீவிரவாத அச்சுறுத்தல்களால், 13 ஆண்டுகளுக்கு பிறகு, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. போதிய பாதுகாப்பு இல்லாததாக குறிப்பிட்டு பிரதான காஷ்மீர் கட்சிகளான பிடிபி மற்றும் தேசிய கான்பரன்ஸ், தேர்தலை புறக்கணித்தன. 

நேற்று நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில், ஜம்மு பகுதிகளில் மக்கள் அதிக அளவில் வந்து வாக்களித்தனர். காஷ்மீரின் பல பகுதிகளில் வாக்குப்பதிவு காணப்பட்டாலும், தீவிரவாத அச்சுறுத்தல் அதிகமுள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில், மந்தமான வாக்குப்பதிவு காணப்பட்டது. 

வாக்குச்சாவடிகளில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டும், இன்றும் மந்தமான வாக்குபதிவே காணப்பட்டது. மதியம் வரை, ஜம்முவின், ரம்பன் மாநகராட்சியில் அதிகபட்சமாக 62.9% வாக்குப்பதிவு காணப்பட்டது. கத்துவாவில் 59.4%, உத்தம்பூரில் 50.8%, ரியாசியில் 60.8%, டோடாவில் 57.8%, கிஷ்த்வாரில் 55.9% வாக்குப்பதிவு நடைபெற்றது. 

அதேநேரம், காஷ்மீர் பள்ளத்தாக்கில், மிக குறைந்த வாக்குபதிவே காணப்பட்டது. அதிகபட்சமாக பண்டிப்போராவில் 22.2% வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆனால், ஸ்ரீநகரில் 1.4%, பாராமுல்லாவில் 3.7%, குப்புவாராவில் 3.3%, அனந்த்நாக்கில் 0.8% என மதியம் வரை மிக குறைந்த அளவிலேயே வாக்குப்பதிவு நடைபெற்றது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close