மேற்கு வங்கத்தில் அதிரடியாக களமிறங்குகிறது பாஜக

  பாரதி கவி   | Last Modified : 11 Oct, 2018 09:37 am

bjp-plans-for-ratha-yatra-in-west-bengal-for-ls-elections

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் அதற்கான முன்னேற்பாடுகளை பாஜக தொடங்கவுள்ளது. மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள திரிணமூல் காங்கிரசை வீழ்த்தி அதிகப்படியான இடங்களில் வெற்றி பெறும் நோக்கில், மூன்று இடங்களில் டிசம்பர் மாதம் ரத யாத்திரைகளை தொடங்க பாஜக திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பாஜக மூத்த  தலைவர் சமிக் பட்டாச்சார்யா கூறுகையில், “ மேற்கு வங்கத்தில் மூன்று ரத யாத்திரைகளை நடத்த கட்சி திட்டமிட்டிருக்கிறது. முதலாவது யாத்திரையை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமை தாங்கி நடத்திச் செல்வார். அடுத்ததாக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஒரு யாத்திரை நடைபெறும். அஸ்ஸாம் மாநில முதல்வர் சர்வானந்த சோனாவில் தலைமையில் மூன்றாவது யாத்திரை நடைபெறும். அதைத்தொடர்ந்து ஜனவரி மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் மேற்கு வங்கத்தில் நடைபெறவிருக்கிறது.

மாநிலத்தில் பாஜகவினருக்கு எதிராக அதிகமான வன்முறைகள் நிகழ்த்தப்பட்டுள்ள பிர்ஹாம் மாவட்டத்தில் இருந்து அமித் ஷா தனது யாத்திரையை தொடங்குவார். யோகி ஆதித்யநாத் தலைமையிலான யாத்திரை சாகர் தீவு பகுதியில் இருந்து தொடங்கும். அதில் மேற்கு வங்க அரசின் மக்கள் விரோத கொள்கைகள் குறித்து எடுத்துரைக்கப்படும். மூன்றாவதாக சோனோவாலின் யாத்திரையின்போது, வங்கதேச ஊடுருவல்காரர்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close