'அனில் அம்பானியின் வாட்ச்மேன் மோடி' - ராகுல் கிண்டல்

  Newstm Desk   | Last Modified : 11 Oct, 2018 05:24 pm

rahul-gandhi-call-pm-modi-as-anil-ambani-s-chowkidar

ரஃபேல் போர்விமான ஒப்பந்தத்தில், ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி சுமார் ரூ.30,000 கோடி சம்பாதிக்க மோடி உதவியதாக விமர்சித்துள்ள ராகுல் காந்தி, பிரதமரை அம்பானியின் வாட்ச்மேன் என்று விமர்சித்துள்ளார். 

ரஃபேல் போர்விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டி வரும் ராகுல் காந்தி, இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, மீடியாபார்ட் என்ற பிரென்ச் ஊடகம் வெளியிட்ட அறிக்கையை குறிப்பிட்டு அவர் பேசியுள்ளார். அதில், பிரென்ச் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனமான டஸால்ட்டுடன் இந்திய அரசு முடிவுக்கு வந்த ஒப்பந்தத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்தை ரஃபேல் ஒப்பந்தத்தில் கட்டாயம் இணைக்க வேண்டும், என இந்திய அரசு சார்பில் குறிப்பிட்டிருந்ததாக கூறப்பட்டது. டஸால்ட் நிறுவனத்தின் ஒரு ஆவணத்தை இதற்கு ஆதாரமாக காட்டியிருந்தது மீடியாபார்ட்.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனத்தை டஸால்ட் தேர்ந்தெடுத்ததற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென மத்திய அரசு கூறி வந்த நிலையில், இந்த அறிக்கை எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு சாதமாக அமைந்தது. இதனால் இன்று பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், பிரதமர் மோடியை கடுமையாகச் சாடினார் ராகுல் காந்தி. "ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ரிலைன்ஸ் அதிபர் அனில் அம்பானி ரூ.30,000 கோடி சம்பாதிக்க மோடி உதவியிருக்கிறார். அவருக்கு கீழ் அத்தனை ஊழலும் நடந்துள்ளது. அம்பானியின் 'சவுக்கிதாராக' (வாட்ச்மேனாக) மோடி இருந்து வருகிறார். 

அதேபோல, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றதை குறிப்பிட்ட ராகுல் காந்தி, "இந்த ஊழலை மறைக்க நடத்தப்பட்ட ஒரு பயணம் தான் அது" எனவும் விமர்சித்தார்.

பிரதமருக்கு உரிய மரியாதையை கொடுக்காமல், 'வாட்ச்மேன்' என மோசமாக விமர்சித்துள்ள ராகுல் காந்திக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், சமூக வலைத்தளங்களிலும் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close