சத்தீஸ்கர் பேரவைத் தேர்தல்: வேட்பாளர் தேர்வில் கட்சிகள் மும்முரம்

  பாரதி கவி   | Last Modified : 12 Oct, 2018 08:58 am

chattisgarh-parties-in-run-to-finalise-canditates

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் பிரதான கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க.வும் ஈடுபட்டு வருகின்றன.

மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில், முதல் கட்டமாக 18 இடங்களுக்கு அடுத்த மாதம் 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கு அக்டோபர் 23ம் தேதிக்குள்ளாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருக்க வேண்டும். இதையொட்டி பிரதான அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.

சத்தீஸ்கரில் பா.ஜ.க. தொடர்ந்து ஆளுங்கட்சியாக இருந்து வருகிறது. அக்கட்சி அடுத்த வாரத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர்களை இறுதி செய்து வருகிறது. அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள், மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் கடந்த இரண்டு நாள்களாக இதுதொடர்பாக டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்று அவர்கள் பட்டியலை இறுதி செய்யவுள்ளதாகத் தெரிகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close