பஞ்சாபில் யாருடனும் கூட்டணி கிடையாது : கெஜ்ரிவால்

  பாரதி கவி   | Last Modified : 12 Oct, 2018 11:07 am

no-alliance-with-any-other-parties-in-punjab-kejriwal

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 12 மக்களவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும், எந்தக் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்றும் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லியில் ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மி, அதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் மாநிலத்தில் நல்ல செல்வாக்குடன் உள்ளது. இங்கு இதற்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தலிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை அக்கட்சியை பெற்றது. இந்நிலையில், அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக கெஜ்ரிவால் கூறியுள்ளார். பஞ்சாபில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர் கூறியதாவது:

பஞ்சாபில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவுள்ளோம். நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை. தற்போது முதல்வராக இருக்கக் கூடிய, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமரீந்தர் சிங், சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.

சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டம், விவசாயக் கடன் ரத்து, இளைஞர்களுக்கு நவீன கைப்பேசியை இலவசமாக வழன்குவதல் உள்ளிட்ட வாக்குறுதிகளையும் அமரீந்தார் கொடுத்திருந்தார். ஆனால், எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. அவர் பொய் பேசுகிறார் என்பதை பஞ்சாப் மக்கள் புரிந்து கொண்டுவிட்டனர் என்றார் கெஜ்ரிவால்

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close