பா.ஜ.க.வில் இணைந்த அன்றே விலகிய பெண் தலைவர்: காரணம் என்ன?

  பாரதி கவி   | Last Modified : 12 Oct, 2018 09:47 am

women-leader-resigns-from-bjp-on-the-same-day-of-joining

தெலுங்கானா மாநிலத்தில் சமூக சேவகர் பத்மினி ரெட்டி, நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார். ஆனால், நேற்று இரவே, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் அவர். காங்கிரஸ் மூத்த தலைவர் தாமோதர் ராஜநரசிம்மாவின் மனைவியான பத்மினி, தான் பா.ஜ.க.வில் இணைந்ததால் காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரான தாமதர் ராஜநரசிம்மா, ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் துணை முதல்வராக பதவி வகித்தவர் ஆவார். இவரது மனைவி பத்மினி ரெட்டி நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார். தெலுங்கானா மாநில பா.ஜ.க. தலைவர் லெட்சுமணன் அவரை வரவேற்றார்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக செய்தியாளர்களைச் சந்தித்த பத்மினி, பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ’’நான் இதை எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ் தொண்டர்கள் வேதனை அடைந்திருப்பதை என்னால் பார்க்க முடியவில்லை. ஆகவே, நான் எனது முடிவை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்’’ என்றார் அவர்.

இதுதொடர்பாக பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் கிருஷ்ண சாகர் ராவ் வெளியிட்ட அறிக்கையில், ’’பத்மினி தனது சுய விருப்பத்தின் அடிப்படையிலேயே பா.ஜ.க.வில் இணைந்தார். அவர் எடுத்த இரு முடிவுகளுக்கும் பா.ஜ.க. மதிப்பளிக்கிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள சமயத்தில் நடந்துள்ள இந்த அரசியல் சதுரங்க விளையாட்டு குறித்து பொதுமக்கள் சுவாரஸ்யமாக பேசி வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close