வேளாண்மை துறையில் இந்தியா - லெபனான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 

  சுஜாதா   | Last Modified : 13 Oct, 2018 08:42 am
cabinet-approves-mou-between-india-and-lebanon-for-cooperation-in-the-field-of-agriculture-and-allied-sectors

வேளாண்மை மற்றும் அதன் சார்பான துறைகளில் இந்தியா மற்றும் லெபனான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர்  நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வேளாண் துறையிலான இந்த ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் பயனளிக்கும். இரு நாடுகளிலும் உள்ள சிறந்த வேளாண் நடைமுறைகளைப் புரிந்துகொள்ளவும், விவசாயிகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் சர்வதேச சந்தையில்  சிறந்து விளங்கவும் இந்த ஒப்பந்தம் துணை புரியும்.

உலகெங்கும் உள்ள சிறந்த சந்தை மற்றும் விவசாய நடைமுறைகளைத் தெரிந்துகொண்டு விவசாய உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பயன்படும். இந்த ஒப்பந்தம்  உற்பத்தியை அதிகரிக்க புது முயற்சிகள் மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டுவந்து உணவு பாதுகாப்பினை பலப்படுத்த வழிவகுக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close