எல்லாமே பொய்; சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் எம்.ஜே. அக்பர் விடாப்பிடி #MeToo

  Newstm Desk   | Last Modified : 15 Oct, 2018 03:13 pm
allegations-are-false-mj-akbar

பாலியல் தொல்லை புகார்களில் சிக்கி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய மத்திய அமைச்சர் எம்.ஜே அக்பர், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய்யானவை என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அக்பர் தங்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக 14 பெண்கள் இதுவரை புகார்கள் அளித்துள்ளனர். சுமார் 15-20 வருடங்களுக்கு முன், அவர் பத்திரிக்கை ஆசிரியராக இருந்தபோது இந்த சம்பவங்கள் நடந்ததாக கூறப்பட்டாலும், இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்ற அமைச்சர் அக்பர், இன்று நாடு திரும்பினார். அவர் உடனடியாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என நெருக்கடி எழுந்து வந்த நிலையில், ராஜினாமா கடிதத்தை அனுப்பி விட்டதாக முன்னர் கூறப்பட்டது. 

அக்டோபர் 6ம் தேதி முதல் அமைச்சரின் ட்விட்டர் கணக்கில் இருந்து எந்த பதிவும் செய்யப்படவில்லை.இந்நிலையில், இன்று பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், தான் ராஜினாமா செய்வதாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய் என தெரிவித்துள்ளார் அமைச்சர் அக்பர். வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்ததால் இதுகுறித்து தன்னால் பேசமுடியவில்லை என கூறிய அக்பர், தன் மீது குற்றம் சுமத்தியுள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close