ஐக்கிய ஜனதாதள துணைத்தலைவராக பிரசாந்த் கிஷோர் நியமனம்! நிதிஷ் குமார் அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 16 Oct, 2018 05:09 pm
nitish-appoints-prashant-kishor-as-jd-u-vice-president

ஐக்கிய ஜனதா தள கட்சியின் துணைத் தலைவராக பிரசாந்த் கிஷோர் என்பவர் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். 

ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீகார் மாநில முதல்வருமான நிதிஷ் குமார், அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து கட்சியில் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

அந்த வகையில், பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோரை கட்சியின் துணைத்தலைவராக நியமித்து உத்தரவிட்டுள்ளதாக, அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கே.சி. தியாகி தெரிவித்துள்ளார். இதன் மூலமாக நிதிஷ் குமாரை அடுத்து, ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஒரு முக்கியமான நபராக  பிரசாந்த் கிஷோர் பார்க்கப்படுகிறார். சில வாரங்களுக்கு முன்னர்தான், பிரசாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதா தள கட்சியில் இணைந்துள்ளார்.  மேலும், பிரசாந்த் கிஷோர் 2014 மக்களவை தேர்தலின்போது பிரதமரின் ஆலோசகராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close