கோவா முதல்வரை மாற்ற பாஜக திட்டம்?

  Newstm Desk   | Last Modified : 17 Oct, 2018 09:43 am
goa-chief-minister-to-be-replaced

கோவா மாநில முதல்வராக பதவி வகித்து வரும் மனோகர் பாரிக்கருக்கு தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நிலையில், அவருக்குப் பதிலாக புதிய முதல்வரை தேர்வு செய்ய ஆளும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருக்கும் விஷ்வஜித் பிரதாப் சிங் ராணே, அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுபாஷ் ஸ்ரீகோதர், தாயனந்த் சோப்தே ஆகிய இரண்டு எம்.எல்.ஏ.க்கள் நேற்று தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்தனர். அவர்களை பா.ஜ.க. வசம் கொண்டு வந்ததில் விஷ்வஜித் பிரதாப் ராணே முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பா.ஜ.க. மேலிடம் அவரிடம் நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது அவரை முதல்வராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஷ்வஜித்தின் தந்தை பிரதாப் ராணே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அவர் நான்கு முதல்வராக இருந்திருக்கிறார். விஷ்வஜித் கடந்த ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்றவராவார். ஆனால், உடனடியாக பதவி விலகிய அவர், பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close