ஒரு லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி - டி.ஆர்.எஸ். வாக்குறுதி

  Newstm Desk   | Last Modified : 17 Oct, 2018 10:38 am
trs-promises-one-lakh-loan-waiver-to-farmers-again

தெலுங்கானா மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் அனைவருக்கும் தலா ரூ.1 லட்சம் வரையில் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி (டி.ஆர்.எஸ். ) கட்சி அறிவித்துள்ளது. அந்தக் கட்சி, இதே வாக்குறுதியை கடந்த 2014ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் அறிவித்து, பின்னர் செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

டி.ஆர்.எஸ். தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினருடன், முதல்வர் சந்திரசேகர ராவ் ஆலோசனை நடத்திய பிறகு, முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம்:

விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும். பயிர் முதலீட்டுக்காக விவசாயிகளுக்கு இதுவரையில் ஒரு ஏக்கருக்கு வழங்கப்பட்டு வரும் 4,000 ரூபாய் இனி 5,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்.

வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,016 உதவித்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள், நெசவாளர்கள், பீடித் தொழிலாளிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிக்கப்படும். மேலும், முதியோர் உதவித் தொகை பெற தகுதியான வயது வரம்பு 65ல் இருந்து 57ஆக குறைக்கப்படும் என்று சந்திரசேகராவ் தெரிவித்தார்.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close