காங்கிரஸில் சேர்ந்தார் மாஜி அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கின் மகன்!

  Newstm Desk   | Last Modified : 17 Oct, 2018 07:26 pm
jaswant-singh-s-son-joins-congress

பாரதிய ஜனதா கட்சியின் துவக்க உறுப்பினர்களுள் ஒருவரும், மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திர சிங், காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். 

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திர சிங் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இன்று காலை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த அவர், ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை அழைத்து, தான் கட்சியில் சேரப்போவதாக தெரிவித்தார். ராஜஸ்தான் மாநில பொதுச்செயலாளர் அசோக் கேலாட், முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில், கட்சியில் அதிகாரபூர்வமாக இணைக்கப்பட்டார். 

முன்னாள் மத்திய அமைச்சர், மூத்த தலைவர் என்று கூட பார்க்காமல், தனது தந்தை ஜஸ்வந்த் சிங்கை கட்சியில் இருந்து ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஒதுக்கியதாக மன்வேந்திர சிங் குற்றம் சாட்டினார். 2014 நாடாளுமன்ற தேர்தலில் இருந்து இது துவங்கியதாகவும், அதனாலேயே கட்சி மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

மன்வேந்திர சிங்கின் மூலம் ராஜ்புட் மக்களின் ஓட்டுக்களை பெற காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close