மிஸோரம்- கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் பா.ஜ.க. ஆட்சி - அமித் ஷா

  Newstm Desk   | Last Modified : 18 Oct, 2018 01:47 pm
mizoram-people-will-celebrate-christmas-in-bjp-govt-amit-shah

மிஸோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில், வருகின்ற கிறிஸ்மஸ் பண்டிகையை மக்கள் பா.ஜ.க.  ஆட்சியில் கொண்டாடுவார்கள் என்று தெரிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா.

அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் பெரும்பாலானவற்றில் பா.ஜ.க.  ஆட்சி அல்லது அவர்களது கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மிஸோரம் மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், அங்கு அடுத்த மாதம் 28ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெற வேண்டும் என பா.ஜ.க.  இலக்கு நிர்ணயித்துள்ளது.

தேர்தல் பணிகளில் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மிஸோரம் மாநிலத்தில் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தை பா.ஜ.க. நடத்தியது. அதில் அமித் ஷா பேசுகையில், “மத்தியில் பா.ஜ.க.  2014இல் ஆட்சிக்கு வந்தபோது வடகிழக்கு மாநிலங்கள் இருந்த நிலைக்கும், தற்போதைய நிலைக்கும் நிறைய வேறுபாடு காணப்படுகிறது. அப்போது ஊழல் மற்றும் தீவிரவாதத்தை மையப்படுத்தியதாக இந்த பிராந்தியம் காணப்பட்டது. தற்போது கலாசாரத்துக்கும், வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வருகின்ற கிறிஸ்மஸ் பண்டிகையை நீங்கள் பா.ஜ.க.  ஆட்சியில் கொண்டாடுவீர்கள் என்று உறுதியளிக்கிறேன்’’ என்றார் அமித் ஷா.

மிஸோரம் மாநிலத்தில் கிறிஸ்த்தவ மக்களே பெரும்பான்மையினர் ஆவர். அங்கு பா.ஜ.க. வெற்றி முடியாது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஆனால், இதேபோன்று கிறிஸ்தவ மக்கள் பெரும்பான்மையினராக உள்ள நாகாலாந்து மற்றும் மேகாலய மாநிலங்களில் பா.ஜ.க.  கூட்டணி அமைந்திருப்பதை சுட்டிக்காட்டிப் பேசியுள்ள அமித் ஷா, அதே வழியில் மிஸோரம் மாநிலத்தில் ஆட்சி அமைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close