ராஜஸ்தான் பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் எம்.பி.க்கள் - காரணம் என்ன?

  Newstm Desk   | Last Modified : 19 Oct, 2018 12:46 pm
congress-mps-in-rajathan-willing-to-contest-assembly-polls

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 200 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் டிசம்பர்  7ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என தற்போது பதவியில் இருக்கும் காங்கிரஸ் எம்.பி.க்கள் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். 

மாநிலத்தில் அடுத்து காங்கிரஸ் கட்சியே ஆட்சியை பிடிக்கக் கூடும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில், மாநில அரசில் இடம்பெறும் நோக்கத்திலேயே எம்.பி.க்கள் பலரும் பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவதாகக் கூறப்படுகிறது. எனினும், பலமிக்க அந்தத் தலைவர்களை மாநில அரசியலில் களமிறக்கிவிட்டால், அடுத்து வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் பலமான வேட்பாளர்களை நிறுத்துவது கடினமாகிவிடும் என்று காங்கிரஸ் கருதுவதாகவும் சொல்லப்படுகிறது.

மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கு நெருக்கமானவராக கருதப்படுகிறார் அஜ்மீர் தொகுதி எம்.பி. ரகு சர்மா. தற்போது பிரசாரக் குழுவின் தலைவராக உள்ள இவர், கெக்ரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட கட்சி மேலிடத்திடம் ஒப்புதல் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. இதேபோல் சி.பி.ஜோஷி,  லால்சந்த் கட்டாரியா உள்ளிட்ட பல தலைவர்கள் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிட கட்சித் தலைமையிடம் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close