காங்கிரஸ் கட்சியினரை சந்தித்து பேசிய இலங்கை பிரதமர்! 

  சுஜாதா   | Last Modified : 19 Oct, 2018 04:03 pm
congress-party-president-rahul-gandhi-called-on-sri-lankan-pm-ranil-wickremesinghe-in-newdelhi

அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார்.  

இந்தியா மற்றும் இலங்கை இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவை மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த  இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசவுள்ள நிலையில், இன்று அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இலங்கை பிரதமரின் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close