பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு கல்தா - ராஜஸ்தான் பா.ஜ.க. முடிவு

  Newstm Desk   | Last Modified : 20 Oct, 2018 12:18 pm
rajasthan-most-sitting-bjp-mlas-could-be-deneied-ticket

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், தற்போது பதவியில் இருக்கும் 160 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டது என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆளுங்கட்சிக்கு எதிரான அலையை குறைக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இங்கு கடந்தமுறை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், மாபெரும் வெற்றி பெற்ற பா.ஜ.க., மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 160 தொகுதிகளை கைப்பற்றியிருந்தது. மீதமுள்ள 40 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெற்றி பெற்றிருந்தன. கடந்த முறை அசுர பலத்தோடு வெற்றி பெற்றிருந்தாலும், தற்போது தேர்தலில் வெற்றி பெறுவதே கடினம் என்ற நிலை பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, தேர்தல் கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் காங்கிரசுக்கு சாதகமாகவே வெளிவந்துள்ளன. 

இந்நிலையில், ஆட்சிக்கு எதிரான அலையை குறைத்து, மக்களிடையே ஆதரவை பெருக்கும் முயற்சியில் பா.ஜ.க. இறங்கியுள்ளது. புதுமுக வேட்பாளர்களை களமிறக்குவதன் மூலமாக, தேர்தலை புத்துணர்ச்சியுடன் சந்திக்கலாம் என்று அக்கட்சி திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், தற்போது பதவியில் இருக்கும் 80 முதல் 100 எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜ.க. மீண்டும் வாய்ப்பளிக்காது என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 “நமோ’’ என்ற செல்போன் செயலி மூலமாக, பா.ஜ.க. அரசுகளின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார். அதில், பாதகமான விமர்சனங்களை பெறும் கட்சிக்காரர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதில்லை என்று பா.ஜ.க. முடிவு செய்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close