தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி

  டேவிட்   | Last Modified : 20 Oct, 2018 09:29 pm
rahul-gandhi-at-telangana

தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். 

தெலுங்கானா மாநில சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தீர்மானித்தார். இதையொட்டி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில தேர்தலுக்கான அறிவிப்புடன் தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
  
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தெலுங்கானா மாநிலத்தில் இரு இடங்களில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பங்கேற்று ஆதரவு திரட்டினார். அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள பைன்ஸா நகரம் மற்றும் காமாரெட்டி மாவட்டத்தில் சார்மினார் அருகே நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அவர் கலந்துகொண்டு பேசினார்.

நிர்மல் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, தெலுங்கானாவில் விரைவில் மாற்றம் வரும் எனவும், டெல்லியில் மோடியின் ஆட்சியும், தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சியும் காணாமல் போய்விடும் எனவும் குறிப்பிட்டார். 

மேலும், இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் விவசாயிகள் கடன் 2 லட்சம் ரூபாயை ஒரே தவணையில் தள்ளுபடி செய்யப்படும் எனவும், பருத்தி கொள்முதல் விலை குவின்ட்டாலுக்கு 7 ஆயிரமாக அதிகரிக்கப்படும் எனவும் உறுதியளித்தார். 

இதைதொடர்ந்து, ஐதராபாத் கூட்டத்தில் பேசிய ராகுல், நாட்டை பிளவுப்படுத்த முதல்முறையாக பிரதமர் ஒருவர் முயற்சித்து வருவதாகவும், இன்று நாடு இருக்கும் நிலையில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு அச்சம் கொள்கின்றனர் எனவும்,  குறிப்பிட்டார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close