ஜம்மு காஷ்மீர்: தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு மோடி நன்றி

  டேவிட்   | Last Modified : 21 Oct, 2018 08:34 am
thanks-to-jammu-people-modi

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு சமீபத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 ஆகிய தேதிகளில் நான்கு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது.
 
நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஜம்மு நகராட்சியில் மொத்தமுள்ள 75 வார்டுகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 43 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதேபோல், ஜம்மு காஷ்மீரில் 178 வார்டுகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

இதனையடுத்து, ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close