நாடாளுமன்றத் தேர்தல்: இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார் கெஜ்ரிவால்

  Newstm Desk   | Last Modified : 21 Oct, 2018 09:37 am
kejriwal-to-kickstart-lok-sabha-polls-campaign-today

அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, டெல்லியில் வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களிடம் மேற்கொள்ளும் பிரச்சாரத்தை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.

டெல்லியில் மொத்தமுள்ள 7 நாடாளுமன்றத் தொகுதிகளுமே தற்போது பா.ஜ.க. வசம் உள்ளன. இங்கு காங்கிரசும் பிரதானக் கட்சியாக உள்ளது. இந்த இரு கட்சிகளையும் ஒருசேர வீழ்த்தி 7 இடங்களையும் கைப்பற்ற வேண்டும் என்று கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வீடு, வீடாகச் செல்லும் பிராச்சரத்தை தொடங்கவுள்ளோம். பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காமல், ஆம் ஆத்மி கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? என்பதையும், காங்கிரசுக்கு வாக்களிப்பது என்பது பா.ஜ.க.வுக்கு மறைமுக வாக்களிப்பதைப் போன்று மாறுவது எப்படி? என்பதையும் வாக்காளர்களிடம் நாங்கள் எடுத்துக் கூறுவோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி இன்று தொடங்கி நாடாளுமன்றத் தேர்தல் வரையிலும் இந்தப் பிரச்சாரத்தை நடத்தவுள்ளது. வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வது மட்டுமல்லாமல், கட்சிக்கு நிதி வசூல் செய்யும் பணியும் மேற்கொள்ளப்படவுள்ளது. டெல்லி அரசின் செயல்பாடுகளையும், பா.ஜ.க. எம்.பி.க்களின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டு மக்களிடம் ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள் பிரச்சாரம் செய்யவுள்ளனர்.  முன்னதாக, 7 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குமான பொறுப்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close