சத்தீஸ்கர் தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.

  Newstm Desk   | Last Modified : 21 Oct, 2018 09:38 am
bjp-releases-candiatate-list-for-chattisgarh

சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி,  பா.ஜ.க. தலைவர் அமித் ஷா ஆகியோர் தலைமையில் டெல்லியில் நடைபெற்ற அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் இந்த வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, பின்னர் வெளியிடப்பட்டது.

மொத்தம் 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள பா.ஜ.க.வுக்கும், எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரசுக்கும் இடையே தேர்தலில் நேரடி போட்டி நிலவுகிறது. இதுதவிர முன்னாள் முதல்வ ர் அஜீத் ஜோகியின் ‘சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ்’ கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.

நவம்பர் 12 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையொட்டி, 77 வேட்பாளர்கள் அடங்கிய முதலாவது பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது. இதில் 14 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். தற்போது பதவியில் இருப்பவர்களில் 14 எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஐ.ஏ.எஸ். பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்த ஓ.பி.சௌத்ரி மற்றும் காங்கிரசில் இருந்து வந்த பழங்குடியினத் தலைவர் ராம்தயால் உய்க் ஆகியோர் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்த மாநிலத்தில் பா.ஜ.க. தொடர்ந்து 15 வருடங்களாக ஆட்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close