காஷ்மீர்: பள்ளி, கல்லூரிகளுக்கு கீதை, ராமாயணம் கொண்டு வரும் திட்டம் ரத்து!

  Newstm Desk   | Last Modified : 23 Oct, 2018 05:18 pm
kashmir-bhagavat-gita-and-ramayana-order-cancelled

ஜம்மு காஷ்மீர் பள்ளிகள் பகவத் கீதை மற்றும் ராமாயணம் வாங்க அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில், கடும் எதிர்ப்பு காரணமாக திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

காஷ்மீர் பள்ளி மற்றும் கல்லூரிகளின் நூலகங்களில் பகவத் கீதை மற்றும் ராமாயணத்தை வாங்க பள்ளிகல்வித்துறை நேற்று உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. முன்னாள் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, "அது என்ன கீதை, ராமாயணம் மட்டும். பள்ளி, கல்லூரி, அரசு நூலகங்களில் மத ரீதியான புத்தகங்கள் வைக்க வேண்டும் என்றால், அதை குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு மட்டும் முன்னுரிமை? ஏன் மற்ற மத புத்தகங்கள் மறுக்கப்படுகின்றன" என அறிக்கை வெளியிட்டார்.

தொடர்ந்து எழுந்த எதிர்ப்பால், அந்த உத்தரவை பின்வாங்குவதாக காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில தலைமை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், "மத ரீதியான புத்தகங்கள் வாங்க கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கை பின்வாங்கப்படுகிறது" என கூறப்பட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close