சிவசேனாவும் பாரதிய ஜனதாவும் இணைந்து போட்டியிடும்: தேவேந்திர பட்னாவிஸ்

  Newstm Desk   | Last Modified : 23 Oct, 2018 09:11 pm
sivasena-bjp-joins-in-2019-election-devendra-patnavis

2019 நாடாளுமன்றத் தேர்தலில் சிவசேனாவும், பாரதிய ஜனதாவும் இணைந்து போட்டியிடும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். 

மத்தியிலும், மகாராஷ்டிராவிலும் ஜனதா கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றுள்ள சிவசேனா, பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. இருப்பினும் குடியரசுத்தலைவர் தேர்தல் மற்றும் நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற காலங்களில் மத்திய அரசுக்கு ஆதரவான முடிவையே முன்னெடுத்தது. இதற்கிடையே 2019 பாராளுமன்றத் தேர்தலில் சிவசேனா தனியாக போட்டியிடலாம் எனவும் யூகங்கள் எழுந்தன. இதனை மறுக்கும் விதமாக மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மத்தியிலும், மகாராஷடிராவிலும் பாரதிய ஜனதா அரசில் சிவசேனாவும் அங்கம் வகிக்கிறது எனவும், 2019 பாராளுமன்றத் தேர்தலில் சிவசேனாவும், பா.ஜனதாவும் இணைந்து போட்டியிடும் எனவும் தெரரிவித்துள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close