நேப்கினுடன் கோவிலுக்கு செல்வீர்களா? ஸ்மிரிதி இரானி

  Newstm Desk   | Last Modified : 23 Oct, 2018 09:20 pm
smriti-irani-s-comments-on-sabarimala-creates-furore

மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சபரிமலை விவகாரம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி, ரத்தம் படித்த சேனிட்டரி நேப்கினுடன் கோவிலுக்கு செல்வீர்களா? என கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கேரளா மட்டுமல்லாமல், பல மாநிலங்களில் இந்த தீர்ப்புக்கு எதிராக பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். தீர்ப்பை மறுசீராய்வு செய்ய கேரளா தேவசம் போர்டு திட்டமிட்டுள்ள நிலையில், மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி, மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், சமஉரிமைக்காக, புனித தலத்தை அசுத்தம் செய்யக் கூடாது என தெரிவித்தார். "ரத்தம் படிந்த சேனிட்டரி நாப்கினை நண்பரின் வீட்டுக்கு கொண்டு செல்வீர்களா. முடியாதல்லவா? பின்னர் எப்படி அதை கடவுளின் வீட்டுக்கு கொண்டு செல்வீர்கள்?" என்றார்.

மேலும், "கடவுளை தரிசிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், கோவிலை அசுத்தப்படுத்தக் கூடாது" என்றார். அமைச்சரின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. 

தீர்ப்புக்கு பின் சபரிமலைக்கு செல்ல முயன்ற சில பெண்கள், ரத்தம் படிந்த நேப்கினை 'காணிக்கையாக' கொண்டு செல்ல முயன்றதாக வெளியான சில தகவல்களுக்கு பதிலளிக்கவே தான் இவ்வாறு கூறியதாக ஸ்ம்ரிதி இரானி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close