18 தொகுதிகளுக்கும் 6 மாதத்தில் தேர்தல்? - ஓ.பி.ராவத்

  Newstm Desk   | Last Modified : 25 Oct, 2018 04:45 pm
chief-election-commissioner-press-meet-for-bypolls-in-tn

18 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டால் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார். 

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்கம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் இந்த 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது. 

இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் கூறுகையில், 'வழக்கமாக ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் அந்த தொகுதிக்கு 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, தமிழ்கத்தில் 18 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டால் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். இன்னும் அதற்கான அறிவிப்பு வெளிவரவில்லை" என்றார். 

அதாவது, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து சபாநாயகர், தீர்ப்பின் நகல் மற்றும் அவரின் உத்தரவுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்ப வேண்டும். மேலும், தமிழக அரசின் இணையத்திலும் 18 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்க வேண்டும்.  இதன்பின்னர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிப்பார். அதைத்தொடர்ந்து இடைத்தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close