சீனாவுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய மேலும் ஐந்து ஆலைகளுக்கு அனுமதி!

  சுஜாதா   | Last Modified : 26 Oct, 2018 12:43 am
five-more-non-basmati-rice-mills-cleared-for-exports-to-china

இந்தியாவிலிருந்து சீனாவுக்கு அரிசி (பாஸ்மதி அரிசி தவிர) ஏற்றுமதி செய்ய மேலும் ஐந்து அரிசி ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மொத்தம் 24 ஆலைகளுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாக்பூரிலிருந்து சீனாவுக்கு கப்பல் மூலம் 100 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு மே மாதம் சீனாவைச் சேர்ந்த அலுவலர்கள் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய திறனுள்ள அரிசி ஆலைகளை ஆய்வு செய்தனர்.  இதில் 19 அரிசி ஆலைகள் மற்றும் பதப்படுத்தும் பிரிவுகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போது இந்தியா மற்றும் சீனா இடையே அரிசி ஏற்றுமதி செய்வதற்கான தாவர நலச்சான்று தொடர்பான  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.  2006-ல் தாவர நலச்சான்று தேவைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு இந்தியாவிலிருந்து பாஸ்மதி அற்ற பிற அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதற்கான வசதி கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close