டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம்: ராகுல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கைது!

  Newstm Desk   | Last Modified : 26 Oct, 2018 02:22 pm
rahul-leads-protest-in-delhi-against-cbi-chief-s-forced-leave

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சியினர் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகம் நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியல் போராட்டம் நடத்திய ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவருக்கும் இடையேயான விவகாரம் இந்தியாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு இருவருக்கும் கட்டாய விடுப்பு அளித்துள்ளது. இதில் மோடியின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படும் ராகேஷ் அஸ்தானாவிற்கு மத்திய அரசு ஆதரவளிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. 

இதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகம் நோக்கி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்றனர். தொடர்ந்து அங்கு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கும், காவல்துறைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

இதற்கிடையே இன்று சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தொடுத்துள்ள வழக்கின் விசாரணையில், அலோக் வர்மா மீதான விசாரணையை 10 நாட்களில் முடிக்க வேண்டும் என மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close