இழுபறிக்கு பின் 50-50; டீல் பேசி முடித்த அமித் ஷா - நிதீஷ்!

  Newstm Desk   | Last Modified : 26 Oct, 2018 10:13 pm
shah-nitish-close-deal-to-contest-equal-seats

பிகார் மாநிலத்தில் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த நிலையில், பாரதிய ஜனதாவும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், தலா 50% இடங்களை பிரித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளன. 

நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், 2014ம் ஆண்டு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்து தனித்து நின்றது. ஆனால், வெறும் இரண்டு இடங்களை மட்டுமே அக்கட்சி வென்றது. 2014ல் பாரதிய ஜனதா 22 இடங்களில் வெற்றி பெற்றது. அதன்பின், தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் நிதிஷ் குமார் சேர்ந்து கொண்டார். 

இந்நிலையில், 2019 தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள இடஒதுக்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. 2014-ஐ போல 22 இடங்களை பா.ஜ கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு மறுத்த நிதிஷ், பாரதிய ஜனதாவை விட ஒரு இடம் கூட குறைந்த நிலையில் கூட்டணி அமையாது, என திட்டவட்டமாக தெரிவித்தார். இன்று பாரதிய ஜனதாவின் தலைவர் அமித் ஷாவுடன் நிதிஷ் குமார் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், இரு கட்சிகளும் ஒரே அளவிலான இடங்களில் போட்டியிட முடிவெடுத்துள்ளனர். 

ஐக்கிய ஜனதா தளத்தை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக, மற்ற கட்சிகளும் வீட்டுக் கொடுக்க முனைந்துள்ளதாக ஷா தெரிவித்தார். "2019 தேர்தலில் பாரதிய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் ஒரே எண்ணிக்கையிலான இடங்களில் போட்டியிடும். மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் சரியான இடங்கள் ஒதுக்கப்படும். எத்தனை இடங்கள் என்பது வரும் நாட்களில் தெரியும். ராம் விலாஸ் பாஸ்வான் மற்றும் உபேந்திரா குஷ்வாஹா (ராஷ்ட்ரிய லோக் சம்தா) ஆகியோரும் கூட்டணியில் நீடிப்பார்கள்" என்றார் ஷா.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close