ராகுல் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் தாரிக் அன்வர்

  Newstm Desk   | Last Modified : 27 Oct, 2018 12:12 pm
sarath-pawar-partyman-tariq-anwar-joins-in-congress

ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், பிரதமர் மோடிக்கு ஆதரவாகப் பேசினார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அக்கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர் தாரிக் அன்வர், டெல்லியில் இன்று ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இவர் கடந்த 1999ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தேசியவாத காங்கிரஸ் கட்சியை சரத் பவார் தொடங்கியதில் இருந்து அவரோடு பயணித்து வந்தவர். இந்நிலையில், மீண்டும் தாய் கட்சியான காங்கிரசுக்கு திரும்பியுள்ளார். அதே சமயம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரசுடன் கூட்டணியில் நீடிப்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியும் அதே நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது. இந்தச் சூழலில், சரத் பவார் அளித்த பேட்டி ஒன்றில், மோடிக்கு ஆதரவான கருத்துக்கள் இருந்ததாகக் குற்றம்சாட்டிய தாரிக் அன்வர், அக்கட்சியில் இருந்து கடந்த மாதம் 28ம் தேதி விலகினார். தனது எம்.பி. பதவியையும் அவர் ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து, ராஷ்ட்ரீய ஜனதா தளம் அல்லது காங்கிரஸ் கட்சியில் தாரிக் அன்வர் இணையக் கூடும் என்ற பேச்சு நிலவியது. அதை மெய்ப்பிக்கும் வகையில், தனது ஆதரவாளர்களுடன் சென்று ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய தாரிக் அன்வர், தம்மை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close