ம.பி: மகாகாளேஷ்வரர் திருக்கோவிலில் ராகுல் சாமி தரிசனம்!

  Newstm Desk   | Last Modified : 29 Oct, 2018 04:40 pm
rahul-visits-mahakaleshwar-temple-begins-2-day-mp-tour

மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அம்மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மகாகாளேஷ்வரர் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் மகாகாளேஷ்வரர் திருக்கோவில். இந்த கோவிலுக்கு ஏற்கனவே முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வந்து சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டுள்ளனர். தற்போது அதே முறையை ராகுல் காந்தி பின்பற்றியுள்ளார். சிவனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டார் ராகுல் காந்தி. 

ராகுல் காந்தி இந்த கோவிலுக்கு இத்தோடு இரண்டு முறை சென்றுள்ளார். முன்னதாக கடந்த 2010ம் ஆண்டு சென்றதாக கட்சி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, இன்று மால்வா பகுதியில் உரையாற்றி வரும் அவர், இன்று நாளையும் மத்திய பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் பரப்புரை ஆற்ற இருக்கிறார். மத்திய பிரதேசத்தில் நவம்பர் 28ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close