நான் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை எனில் முதல்வராக ஆகியிருக்க முடியாது: சித்தராமையா

  Newstm Desk   | Last Modified : 29 Oct, 2018 05:28 pm
became-cm-because-i-joined-congress-siddaramaiah

நான் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை எனில் முதல்வராக ஆகியிருக்க முடியாது, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் ஆசியால் நான் பிரதமரானேன் என சித்தராமையா தெரிவித்துள்ளார். 

கர்நாடகாவில் ஜாம்கண்டி பகுதியில் நேற்று ஒரு கூட்டத்தில் பேசிய கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, "ராகு, கேது, சனி என அனைத்தும் ஒன்று சேர்ந்து என்னை தோற்கடித்துவிட்டது. ஆனால் பதாமி மக்கள் என்னுடன் இருந்து எனக்கு வலிமையை தந்தனர். நான் இப்போது முதல்வராக இல்லாவிட்டாலும், மக்களின் அன்பு என்னுடன் இருக்கிறது.

முன்னதாக சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில், "பா.ஜ.க மாநிலத் தலைவர் எடியூரப்பா, கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கலைந்து விடும் என்று கூறியுள்ளார். இதற்கு முன்பு பல முறை 'ஆப்பரேஷன் தாமரை' மூலம் எங்களது கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க போட்ட திட்டங்கள் தோல்வியில் முடிந்தது. இதனால் கர்நாடக பா.ஜ.க கோமா நிலைக்கு சென்றுவிட்டது. எனவே, பா.ஜ.க மீண்டும் ஆபரேஷன் தாமரையை கையில் எடுக்க வேண்டாம்" என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close