காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பத்தே நாட்களில் விவசாயக் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி

  ஐஸ்வர்யா   | Last Modified : 29 Oct, 2018 08:32 pm
rahul-gandhi-targets-pm-narendra-modi-over-cbi-promises-to-waive-off-farmer-loans-in-10-days-of-elections

மத்தியப்பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 10 நாட்களுக்குள் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளார். 

மத்தியப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பிரச்சாரம் சூடுபறக்க தொடங்கியுள்ளது. பின், ஜாப்வா, இந்தூர், தார், அம்பேத்கர் பிறந்த மவ் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்டு வருகிறார். அப்போது பிரச்சாரத்தில் பேசிய ராகுல்காந்தி,  “ஷிப்ரா நதியைத் தூய்மைப்படுத்த 400 கோடி ரூபாய் ஒதுக்கினர், ஆனால் அங்கு சென்று அங்குள்ள நீரை அமைச்சர்கள் பருகினால் மயங்கி விழுந்து நினைவிழந்து விடுவர். மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், முதல் 10 நாட்களுக்குள் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும்” என்று கூறினார்.

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close