ராமர் கோவிலுக்காக மாபெரும் போராட்டம்: ஆர்எஸ்எஸ்

  Newstm Desk   | Last Modified : 02 Nov, 2018 07:16 pm
mass-agitation-for-ram-temple-rss

ராமர் கோவில் விவகாரத்தை விரைவில் முடிக்க மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக, 1992ம் ஆண்டை போல மாபெரும் போராட்டம் நடத்த தயாராக இருப்பதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

ராமர் கோவில் போன்ற வழக்குகளை நீதிமன்றங்கள் விரைவில் விசாரிக்க வேண்டுமென்றும், விரைவில் ராமர் கோவில் விவகாரங்களில் உள்ள சட்ட சிக்கல்கள் தீர்ந்துவிடும், என்றும் ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார். விரைவில், ராமர் கோவிலுக்காக மாபெரும் போராட்டங்கள் நடத்த வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

மஹாராஷ்டிராவில் நடைபெற்ற ஒரு ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பேசியபோது, "ராமர் கோவில் விரைவில் கட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏற்கனவே நீண்ட காலமாக காத்திருந்து விட்டோம். இனியும் காத்திருக்க முடியாது. தேவையென்றால் மீண்டும் மாபெரும் போராட்டம் நடத்துவோம்" என்றார் ஜோஷி.

மேலும், ராமர் கோவில் கட்டுவதற்காக அவசர சட்டத்தை அரசு இயற்ற வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close