மோடி மீண்டும் பிரதமராக மக்கள் ஆதரவு: ஆன்லைன் கருத்துக் கணிப்பு

  சுஜாதா   | Last Modified : 03 Nov, 2018 07:26 am
online-survey-says-majority-prefer-modi-as-pm-for-2nd-term

இந்திய பிரதமர் மோடியின் மீது 63% மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், 50%   மேற்பட்டோர் மோடி மீண்டும் பிரதமராவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, இணையதள செய்தி நிறுவனமான  ‘டெய்லிஹண்ட்’ மற்றும் நீல்சன் இந்தியா நிறுவனம் சார்பில், மத்தியை ஆளும் பாஜக அரசு குறித்தும் பிரதமர் மோடியின் செயற்பாடுகள் மற்றும் திறமைகள் குறித்து மக்களின் கருத்துக்களை அறிவதற்காக நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. 

இதில், நாட்டின் வளர்ச்சிக்கும், நலன்களுக்கும் சரியான நபராக பிரதமர் மோடியை 63 சதவீதத்தினர் ஆதரித்து உள்ளனர். அதே சமயம் அவர் 2-வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம் தங்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கித்தருவார் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். மேலும் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவதற்கு 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இதில் அடுத்த இடங்களை ராகுல் காந்தி (17 சதவீதம்), அரவிந்த் கெஜ்ரிவால் (8 சதவீதம்), அகிலேஷ் யாதவ் (3 சதவீதம்) ஆகியோர் பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த கருத்துக் கணிப்பை பொய் தகவல் என்றும் வீண்வேலை எனவும் காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close