பா.ஜ.க-வின் எண்ணம் பலிக்காது - முதல்வர் குமாரசாமி

  Newstm Desk   | Last Modified : 03 Nov, 2018 12:36 pm
bjp-s-plan-never-be-fulfilled

கர்நாடகாவில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து வரும் நிலையில் பா.ஜ.க-வின் திட்டம் நிறைவேறாது என முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

ஹாசனில் உள்ள பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோயிலில் குடும்பத்துடன் தரிசித்து விட்டு, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குமாரசாமி, "இந்த இடைத்தேர்தலில், எங்களில் கூட்டணிக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். அந்த வெற்றி நாடாளுமன்ற தேர்தலுக்கான படிக்கல்லாய் அமையும். 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் - ஜனதாதளத்தின் கூட்டணி தொடரும்.

எங்கள் கூட்டணி மீது, தேவையில்லாத குற்றச்சாட்டை பா.ஜ.க அரசு பரப்பி வருகிறது. அவர்கள் மீதுள்ள தவறை மறைக்க, மற்ற கட்சிகள் மீது குற்றம்சாட்டுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். |கூட்டணி ஆட்சி விரைவில் கவிழும், இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி இருக்காது என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். பா.ஜ.க-வின் இந்தத் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது, இதைத் தேர்தலுக்குப் பிறகும் எங்கள் கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும் எனத் தெரிவித்தார். 
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close