பொய்களை அள்ளி வீசும் எதிர்கட்சியினர்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2018 09:24 am
opponent-paryties-lies-like-ak-47-pm-modi

ஒரு சில எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏகே 47 குண்டுகளைப் போல் பொய்களை அள்ளி வீசுகின்றனர் என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். 

5 மக்களவை தொகுதிகளின் பாஜக நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நேற்று கலந்துரையாடினார். இதில், கட்சி நிர்வாகிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் கூட்டணியை பாஜக நிர்வாகிகள் பிரச்னையாக எடுத்துக்கொள்ளவேண்டாம் , மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனவும், மாறாக, ராணுவத்தை இழிவுபடுத்தியதற்காகவும், நாட்டின் நற்செயல்களை கண்டுகொள்ளாமல் இருந்ததற்கும் அவர்களை மக்கள் வெறுப்பார்கள் எனவும் குறிப்பிட்டார். 

மேலும், ஒரு சில தலைவர்கள் பொய் கருவிகள் போல் எப்போது வாயை திறந்தாலும், ஏகே 47 துப்பாக்கி குண்டுகள் போல் பொய்களை அள்ளி வீசுகின்றனர் எனவும், அவர்களது பொய் முகத்திரையை கிழிக்கும் வகையில், உண்மைத் தகவலை வாட்ஸ் அப் போன்றவை மூலம் பெரும்பாலான மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 

மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தான தகவல்களை தனது செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொண்டு அதை பெரும்பாலான மக்களிடம் கொண்டு சேர்த்து விளம்பரப்படுத்தவேண்டும் என்றும், தற்போதைய அரசின் செயல்பாடுகளை கடந்த ஆட்சியுடன் ஒப்பிட்டு விளக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close