தெலுங்கானாவில் நக்மாவுடன் ஆட்டம் காட்டத் தயாராகும் குஷ்பு!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 04 Nov, 2018 10:58 pm
actress-kushboo-to-campaign-in-telangana

தெலுங்கானா சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

தெலுங்கானா மாநிலம் வரும் டிசம்பர் 7ஆம் தேதி, சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி உள்ளது.அங்கு தெலுங்கு தேசம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. மொத்தமுள்ள 119 தொகுதிகளையும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும், முதலமைச்சருமான கே.சந்திர சேகர ராவ் கண்காணித்து வருகிறார். தெலுங்கானா மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 90 இடங்களில் தனித்து போட்டியிடவும், கூட்டணிக்கு 29 இடங்களும் ஒதுக்கீடு செய்துள்ளது. 

சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியை வீழ்த்த காங்கிரஸ் திவிரமாக உள்ளது. இதனால் பிரசாரத்தில் நட்சத்திர பட்டாளங்களை களம் இறக்க முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே நடிகைகள் நக்மா, விஜயசாந்தி ஆகொயோர் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குஷ்புவும் அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். வாராங்கல், மெஹபுப்நகர் மற்றும் பிற பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்ய வுள்ளார். தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியை வீழ்த்த காங்கிரஸ் திவிரமாக உள்ளது. இதனால் பிரசாரத்தில் நட்சத்திர பட்டாளங்களை களமிறக்கி வருகிறது.  

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close