இந்திய போட்டி ஆணையத்தின் தேசிய மாநாடு இன்று தொடக்கம் 

  சுஜாதா   | Last Modified : 05 Nov, 2018 07:54 am
cci-to-hold-national-conference-on-public-procurement-competition-law

பொது கொள்முதல் மற்றும் போட்டிச் சட்டம் குறித்த இந்திய போட்டி ஆணையத்தின் தேசிய மாநாடு டெல்லியில் இன்று தொடங்க உள்ளது.

இந்திய போட்டி ஆணையம் ஏற்பாடு செய்துள்ள பொது கொள்முதல் மற்றும் போட்டிச் சட்டம் பற்றிய தேசிய மாநாடு டெல்லியில் இன்று (05.11.2018) நடைபெற உள்ளது. பொது கொள்முதல் சுற்றுச்சூழல் அமைப்பில் போட்டி ஆலோசனை மற்றும் முக்கிய பங்குதாரர்களை  ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.  மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட்  விவகாரங்கள் துறை அமைச்சர் அருண்ஜேட்லி இந்த தேசிய மாநாட்டில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று முக்கிய உரை நிகழ்த்துகிறார்.

இம்மாநாட்டில் மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகளின் முதுநிலை அந்தஸ்தில் உள்ள கொள்கை வகுப்போர், பொதுத்துறை நிறுவனங்கள், தொழில்துறை சட்டம் மற்றும் நிதித்துறை வல்லுநர்கள், கார்ப்பரேட் வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் இது தொடர்புடைய பங்குதாரர்கள்  உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள். இந்த ஒருநாள் மாநாட்டில் பொது விவாதம் நடத்துவதற்காக இரண்டு அமர்வுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close