ஹிட்லர் யார்... மோடியா? இந்திரா காந்தியா? - பா.ஜ.க பதிலடி

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2018 05:53 pm
indra-gandhi-used-hitler-s-language

ஹிட்லர் போல செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடியை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்த நிலையில், ஹிட்லரின் பாஷையை பயன்படுத்தியது இந்திரா காந்தி தான் என பாரதிய ஜனதா பதிலடி கொடுத்துள்ளது.

மும்பையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியில் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமர் நரேந்திர மோடியின் போக்கு, ஜெர்மனியின் முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லரை போல உள்ளதாக விமர்சித்தார். கடந்த 4 ஆண்டுகளில் எந்த விஷயத்தையும் பாரதிய ஜனதா அரசு சரியாக செய்யவில்லை என்றும் விமர்சித்தார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "கார்கே ஒரு அடி மேலே சென்றுவிட்டார். பிரதமரை ஹிட்லர் என் அழைத்துள்ளார். எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. எமர்ஜென்சியின் போது ஹிட்லரின் பாஷயை பயன்படுத்தியது இந்திரா காந்தி தான்" என்றார். 

மேலும், சுதந்திரமாக முடிவெடுக்க முடியாமல், ஒரு குடும்பத்தின் பிடியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் கார்கே, ஜனநாயகத்தை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது என்றும் அமைச்சர் கூறினார். "அவர்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர். எனக்கு புரிகிறது. தோல்வியின் விளிம்பில் இருப்பதால், இதுபோன்ற பேச்சுக்களில் ஈடுபடுகிறார்கள்" என்றார் பிரசாத். 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close