விவசாயிகளின் பணத்தை கொள்ளையடிக்கிறார் மோடி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2018 06:58 pm
pm-modi-looting-farmers-rahul-gandhi

பயிர் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் விவசாயிகளின் பணத்தை பிரதமர் நரேந்திர மோடி கொள்ளையடித்து வருவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடந்த ஊழலைக் காட்டிலும், பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் அதிகமான பணம் ஊழல் செய்யப்பட்டிருப்பதாக பத்திரிகையாளரும், விவசாய ஆர்வலருமான பி.சாய்நாத் எழுதியுள்ள கட்டுரையை ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், ’’ரஃபேல் ஒப்பந்தம் மூலம் இந்திய விமானப் படையின் பணத்தைக் கொள்ளையடித்த நிலையில் தற்போது பயிர் காப்பீடு என்ற பெயரில் விவசாயிகளின் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் நோக்கம் ஒன்றுதான். தனது பணக்கார நண்பர்களின் பைகளில் பல கோடி ரூபாய் பணத்தை நிரப்ப வேண்டும் என்று மோடி நினைக்கிறார்’’  என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளை மத்திய அரசு தொடக்கத்தில் இருந்தே மறுத்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியின்போது பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் நிறுவனத்திடம் பேரம் பேசப்பட்டதைக் காட்டிலும் குறைவான விலைக்கே தற்போது ரஃபேல் விமானங்கள் அந்நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close