தெலுங்கானாவில் 9ம் தேதி தொகுதிப் பங்கீடு: காங்கிரஸ் தகவல்

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2018 06:44 pm
seat-sharing-on-telangana-to-be-finalised-on-9-congress

தெலுங்கானா மாநிலத்தில், மகா கூட்டணியில் இடம்பெற்றுள்ள  கட்சிகளிடையேயான தொகுதிப் பங்கீடு, 9ம் தேதி இறுதி செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இக்கூட்டணியில் தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட், தெலுங்கானா ஜன சமிதி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து தெலுங்கானாவுக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ஆர்.சி.குந்தியா செய்தியாளர்களிடம் கூறுகையில், “தொகுதிப் பங்கீட்டில் கூட்டணிக் கட்சிகளிடையே குழப்பம் இல்லை. அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏறத்தாழ இறுதி செய்யப்பட்டுவிட்டது. இதுகுறித்து 9ம் தேதி அறிவிப்பு வெளியாகலாம்’’ என்றார் அவர்.

தெலுங்கு தேசம் கட்சி 18 தொகுதிகளையும், தெலுங்கானா ஜன சமிதி கட்சி 14 தொகுதிகளையும், இந்திய கம்யூனிஸ்ட் 5 தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சியிடம் கேட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தம் 119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 7ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு ஆளும் டி.ஆர்.எஸ்., காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி மற்றும் பா.ஜ.க. என மும்முனை போட்டி நிலவுகிறது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close