இந்தியாவின் செய்தியை உலகிற்கு முன்னெடுத்துச் செல்லும் இயக்கத்தை தொடருங்கள் : வெங்கையா நாயுடு

  சுஜாதா   | Last Modified : 06 Nov, 2018 08:57 am
continue-the-mission-of-carrying-india-s-message-to-the-world-vp-tells-indians-in-malawi

குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு, மாலவியில் அங்குள்ள இந்திய சமூகத்தினரிடையே, பேசுகையில் இந்தியாவின் செய்தியை உலகிற்கு முன்னெடுத்துச் செல்லும் இயக்கத்தை தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

அரசு முறை பயணமாக ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள வெங்கையா நாயுடு, மாலவியில் உள்ள இந்திய சமூகத்தினரிடையே  பேசுகையில் இந்தியாவின் பண்புகள் மற்றும் வாழ்க்கை நடைமுறைக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் கலாச்சார தூதர்களாக பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பகிர்ந்து கொள்வதும் பராமரிப்பும் இந்திய தத்துவத்தின் முக்கிய அம்சமாகும் என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், புரிதல் மற்றும் ஆளுமையை தெரிந்து கொள்ளுதல் ஆகியவற்றுக்கிடையே, இணைப்பை மேம்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். “உங்களது செழிப்பை மாலவியின் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் இடையே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், முன்னேற்றத்தில் அவர்களையும் பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ள  வேண்டும்” என்றும் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

இந்தியாவில் மாற்றங்களுக்கான சீரமைப்புகளை மேற்கொண்டு வரும் பிரதமர் நரேந்திரமோடி அரசின் திட்டங்களை எடுத்துரைத்த குடியரசுத் துணைத் தலைவர், சீரமைப்பு பாதையை நோக்கி இந்தியா நடைபோடுவதாகவும், தெரிவித்தார். சிறந்த நலனை நோக்கி, வர்த்தகத்திற்கான சுற்றுச்சூழல் மாறிவருவதை சுட்டிக்காட்டிய அவர், இதனை இந்திய சமூத்தினர் உற்றுநோக்கி, நிலைமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close