கர்நாடக இடைத்தேர்தல்: காங்கிரஸ் – ம.ஜ.த கூட்டணி முன்னிலை

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2018 02:39 pm
karnataka-by-polls-cong-jd-s-alliance-leading

கர்நாடக மாநிலத்தில் 3 மக்களவைத் தொகுதிகளுக்கும், 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த சனிக்கிழமை நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் 4 இடங்களில், ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம்(மஜத), காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது. பா.ஜ.க. ஓரிடத்தில் மட்டும் முன்னணி பெற்று வருகிறது.

பெல்லாரி, ஷிமோகா, மாண்டியா ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கும், ராம்நகரா, ஜம்காண்டி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

பெல்லாரி மக்களவைத் தேர்தலில் 6ம் சுற்று வாக்கு எண்ணிக்கையின்படி காங்கிரஸ் வேட்பாளர் உகரப்பா, பா.ஜ.க.வைக் காட்டிலும் ஒரு லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று முன்னிலையில் இருக்கிறார். மாண்டியா மக்களவைத் தொகுதியில் மஜத வேட்பாளரும் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னணி வகிக்கிறார்.

ஷிமோகா மக்களவைத் தொகுதியில், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா, மஜத வேட்பாளரை பின்னுக்குத் தள்ளியுள்ளார். ராம்நகரா, ஜம்காண்டி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் – மஜத கூட்டணி வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர்.

newstm.in

 

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close