அஜீத் ஜோகி – மாயாவதி கூட்டணியை புறம்தள்ள முடியாது – சத்தீஸ்கர் முதல்வர்

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2018 10:51 am
ajith-jogi-mayawati-alliance-cannot-be-ignored-raman-singh

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், முன்னாள் முதல்வர் அஜீத் ஜோகியின் சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இடையேயான கூட்டணியை அவ்வளவு எளிதில் புறம்தள்ளிவிட முடியாது என்று பா.ஜ.க. முதல்வர் ரமண் சிங் கூறியுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மொத்தம் 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் ஆளும் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அஜீத் ஜோகி, மாயாவதியுடன் இணைந்து மூன்றாவது அணியை அமைத்து தேர்தலில் களமிறங்கியுள்ளார். இவர்களது கூட்டணியின் தாக்கம் 30 தொகுதிகளிலாவது எதிரொலிக்கும் என்று ரமண் சிங் கூறியுள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டிலும் ஆட்சிக்கு எதிரான மனநிலை இருந்ததாக சொல்லப்பட்டதாகவும், ஆனால், கடந்த 15 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில், அனைத்து கிராமங்களுக்குமான சாலை வசதி, மின்சார வசதி, பள்ளி வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தியுள்ளதன் மூலம் புதிய சத்தீஸ்கர் கட்டமைக்கப்பட்டுள்ளதை மனதில் வைத்து மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்த பிரச்னை சத்தீஸ்கர் மாநிலத்தோடு தொடர்புடையது அல்ல என்பதால், அது தேர்தலில் எதிரொலிக்காது என்றார் ரமண் சிங்.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close