மத்திய பிரதேச கருத்துக்கணிப்பு: மீண்டும் ஆட்சியமைக்கும் பாரதிய ஜனதா!

  Newstm Desk   | Last Modified : 08 Nov, 2018 10:42 pm
madhya-pradesh-opinion-poll-bjp-to-win-again

மத்திய பிரதேச மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அங்கு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், பாரதிய ஜனதா கட்சி கணிசமான இடங்களை இழந்தாலும், மீண்டும் ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த மாதம் மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. 230 தொகுதிகளில், கடந்த தேர்தலில், 165 இடங்களை வென்று ஆட்சியமைத்த பாரதிய ஜனதா கட்சி, இந்தமுறை 43 இடங்களை இழந்து, 122 இடங்களை மட்டுமே வெல்லும் என இந்தியாடிவி- சிஎன்எக்ஸ் பொதுமக்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் நடைபெற்ற கருத்துக்கணிப்பில், முதல்வர் ஷிவ்ராஜ் சவுகான் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, 128 இடங்களை வென்று 4வது முறையாக ஆட்சியமைக்கும் என கூறப்பட்டது. புதிய கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் கட்சி கணிசமான அளவு முன்னேற்றமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2013 தேர்தலில் 58 இடங்களை மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சி, இந்த தேர்தலில், 95 இடங்களை வெல்லும் எனவும் இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, 3 இடங்களை வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close