மத அடிப்படையில் பிரசாரம் - கேரள முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. தகுதிநீக்கம்

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 12:37 pm
kerala-mla-disqualified-by-high-court-today

கேரளாவில் தேர்தலின்போது மத அடிப்படையில் பிரசாரம் செய்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு நிரூபனம் ஆனதையடுத்து, முஸ்லீம் லீக் கட்சியின் எம்.எல்.ஏ. கே.எம்.ஷாஜியை தகுதிநீக்கம் செய்து, கேரள உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2016ல் நடைபெற்ற  சட்டப்பேரவைத் தேர்தலில், ஆழிக்கோடு தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கே.எம்.ஷாஜி. முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞரணித் தலைவராகவும் அவர் இருக்கிறார். மேலும், முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்திய பொருளாளராகவும் ஹாஜி பதவி வகித்து வருகிறார்.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது, முஸ்லீம் அல்லாத வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அச்சிடப்பட்ட நோட்டீஸ்களை வாக்காளர்களுக்கு ஹாஜி வழங்கியதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக, சுயேச்சை வேட்பாளர் எம்.வி.நிகேஷ் குமார், கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

அந்த வழக்கில், நீதிபதி பி.டி.ராஜன் இன்று தீர்ப்பு வழங்கினார். அப்போது, ஹாஜியை பதவிநீக்கம் செய்வதுடன், ஆழிக்கோடு தொகுதியில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ஹாஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close