ராஜஸ்தான் பிரசாரக் களம் - 12 நாள்களுக்கு களமிறங்கும் மோடி, அமித் ஷா

  Newstm Desk   | Last Modified : 11 Nov, 2018 11:01 am
pm-modi-amit-shah-shedule-to-campaign-in-rajasthan

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா ஆகியோர், அந்த மாநிலத்தில் வரும் 23ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 4ம் தேதி வரையில் 12 நாள்களுக்கு பிரசாரம் செய்யவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி மொத்தம் 10 பொதுக்கூட்டங்களில் பங்கேற்கவுள்ளதாகவும், அவரது முதலாவது பொதுக்கூட்டம் ஆல்வார் மாவட்டத்தில் 23ம் தேதி நடைபெறும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோல் ஜெய்ப்பூர் மற்றும் பில்வாரா மாவட்டங்களில் 26ம் தேதியும், நாகௌர், கோட்டா ஆகிய இடங்களில் 27ம் தேதியும், அதற்கு அடுத்த நாளில் துன்கார்பூர் மற்றும் தௌசா ஆகிய இடங்களிலும் பிரதமர் மோடி பிரசாரம் செய்யவுள்ளார். 

இதேபோன்று, ராஜஸ்தானில் 15 இடங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ள அமித் ஷா, நாளொன்றுக்கு 2 அல்லது 3 பொதுக்கூட்டங்களில் பங்கேற்பார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்கி 19ம் தேதி வரையில் நடைபெறுகிறது. அதன் பின்னர் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியலை 22ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. அதற்கு அடுத்த நாளில் இருந்து மோடியும், அமித் ஷாவும் பிரசாரம் செய்யவுள்ளனர். ராஜஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. ஆளும் பா.ஜ.க.வும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் நேருக்கு நேர் மோதுகின்றன.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close