குற்ற விவகாரங்களில் பரஸ்பர சட்ட உதவிக்கான ஒப்பந்தத்தில் இந்தியா-மொராக்கோ கையெழுத்து

  சுஜாதா   | Last Modified : 13 Nov, 2018 05:48 am
india-morocco-sign-mla-pact-to-help-each-other-in-criminal-legal-matters

குற்ற விவகாரங்களில் பரஸ்பர சட்ட உதவி அளிப்பதற்கான ஒப்பந்தம் இந்தியா-மொராக்கோ இடையே கையெழுத்தாகியுள்ளது. இந்திய அரசு சார்பில் மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு-வும், மொராக்கோ அரசு சார்பில் அந்நாட்டின் நீதித் துறை அமைச்சர் முகமது அஜ்ஜாரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தம், மொராக்கோவுடனான இருதரப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதுடன், குற்றங்களை தடுத்தல், புலனாய்வு மற்றும் வழக்கு தொடர்வது குறித்த விரிவான சட்ட நடைமுறைகளை வழங்கவும் வகை செய்கிறது. அத்துடன், தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி எங்கிருந்து கிடைக்கிறது என்பதை கண்டறிந்து, அதனை முடக்கவும் இந்த ஒப்பந்தம் உதவும்.

திட்டமிட்ட குற்றம் மற்றும் பயங்கரவாதத்தால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை முறியடிக்க,  கூட்டாக பாடுபடுவது என்றும் இரு அமைச்சர்களும் உறுதிபூண்டுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close