ஜம்மு-காஷ்மீருக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் - பா.ஜ.க. வலியுறுத்தல்

  Newstm Desk   | Last Modified : 22 Nov, 2018 10:02 am
elections-should-be-held-in-jammu-kashmir-bjp

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்போது, அதனுடன் சேர்த்து ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. மாநில சட்டப்பேரவை கலைக்கப்பட்ட நிலையில், இந்தக் கோரிக்கையை அந்தக் கட்சி முன்வைத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியில் இருந்த மக்கள் ஜனநாயகக் கட்சி(பிடிபி) - பா.ஜ.க. கூட்டணி இடையே பிளவு ஏற்பட்ட நிலையில், அந்த ஆட்சி சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 5 மாதங்களாக அங்கு ஆளுநர் ஆட்சி அமலில் உள்ளது. 

இந்தச் சூழலில், காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் புதிய அரசை அமைக்க மக்கள் ஜனநாயகக் கட்சி முயற்சித்தது. இதேபோல், பா.ஜ.க.வின் ஆதரவுடன் மக்கள் மாநாட்டுக் கட்சியும் ஆட்சி அமைக்க நினைத்தது. இதுதொடர்பாக, இந்த இரண்டு புதிய கூட்டணியினரும் ஆளுநரிடம், அரசு அமைக்க உரிமை கோரினர். ஆனால், திடீர் திருப்பமாக ஆளுநர் நேற்றிரவு சட்டப்பேரவையை கலைத்தார்.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மாநில பா.ஜ.க. தலைவர் ரவீந்தர் ரெய்னா வலியுறுத்தியுள்ளார். தற்போதைய அரசியல் சூழல் குறித்து விவாதிப்பதற்காக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் இன்று நடைபெறவிருப்பதாகவும் அவர் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close